Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிங்கு ராஜாவில் எம்.ஜி.ஆர் ரசிகனுக்கும், ரஜினி ரசிகைக்கும் காதல்!

25 ஜன, 2013 - 10:41 IST
எழுத்தின் அளவு:

"மனம் கொத்தி பறவை" கொடுத்த உற்சாகத்தில் அடுத்தும் வில்லேஜ் காமெடி டிராக்கிலேயே பயணம் செய்கிறார் எழில். படத்தின் பெயர் தேசிங்கு ராஜா. "பெரிய ஹீரோவையெல்லாம் வச்சு படம் பண்ணிட்டு இப்படி காமெடியில விட்டீர்களே என்று யாராவது கேட்டால்  "இங்க நாலைஞ்சு ஹீரோக்கள் அவுங்களுக்குன்னு ஒரு இமேஜ் உண்டாக்கிகிட்டு அதுக்குள்ளேயே சுத்திக்கிட்டு வர்றாங்க. பெண்ணின் மனதை தொட்டுன்னு ஒரு படம் எடுத்தேன். அது புதுமுகங்கள் நடிக்க வேண்டிய படம். ஆனால் புதுமுகங்கள் நடிச்சா வியாபாரமாகாதுன்னு பிரபுதேவா, சரத்குமாரை வைச்சு எடுத்தேன் படம் பிளாப். அதான் சின்னதா பண்ணி பெருசா சம்பாதிக்லாமுன்னு இறங்கிட்டேன்.

தேசிங்கு ராஜாபோட கதையே கேட்டால் எதிலிமிருந்து சுடாத கதை என்பதால் வெளிப்படையாக சொல்கிறார். "ரொம்ப சிம்பிள். கிராமத்துல இருக்கிற காமெடி பீஸ்தான் விமல், தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகன். எம்.ஜி.ஆர் படம் எந்த ஊர்ல நடந்தாலும் சைக்கிள்ளேயே போயி பார்த்துட்டு வந்துடுவான். ஒவ்வொரு படத்தையும் எத்தனை தடவை பாத்துருக்கோமுன்னு கணக்கு வச்சிக்குவான். இப்படி பொறுப்பில்லாம இருக்கிறவனுக்கு ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. ஒரு தடவை பக்கத்து ஊருக்கு படம் பார்க்கபோனப்போ அங்க பிந்து மாதவியை சந்திக்கிறான். அதுவும் இவனை மாதரி சினிமா பைத்தியம். ஆனால் ரஜினி ரசிகை. ஆரம்பத்துல முட்டிக்கிறவங்க. அப்புறம் காதலிக்கிறாங்க. பிறகுதான் தெரியுது. அந்த பொண்ணுக்கு ஒரு வில்லங்கமான பின்னணி இருக்குன்னு. இவுங்க காதலால ஊரே ரெண்டு பட்டு நிக்கும்போது இந்த காமெடி காதல் ஜோடிங்க இதை சமாளிக்றாங்கறதுதான் கதை. ஆக்ஷனுக்கு நிறைய இடம் இருந்தும் அதையும் காமெடியாவே பண்ணியிருக்கோம். சீரியசான கேரக்டர்லேயே நடிச்ச பிந்து மாதவி இதுல காமெடியில பின்னுவாங்க. 100 ரூபா கொடுத்து படம் பார்க்க வர்றவங்கள சிரிக்க வச்சு அனுப்புறதான் இப்போ என்னோட வேலை" என்றார். 

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

வெங்கடேசன் - chennai,இந்தியா
26 ஜன, 2013 - 07:53 Report Abuse
 வெங்கடேசன் கலை கலைக்காகவா, மக்கள் சமூகத்துக்காகவாங்குறதுல தெளிவா இருக்குறவங்கள அசச்சுக்க யாருமில்ல... உண்மையை ஒத்துக்கிறதுக்கும், சொல்றதுக்கும் அனுபவத்தோட ஒரு பக்குவம் தேவைப்படுது சார்,.. அது இருக்குற வரைக்கும் காமெடி எக்ஸ்பிரஸ் படு ஸ்பீடா போய்கிட்டே இருக்கும் எழில் சார்... மனசுல எந்த பகையும் வச்சுக்காம, வெகுளித்தனமா (புரிதலோட) எல்லாரையும் அனுசரிச்சு நடந்து, பகைன்னு மத்தவங்க நெனச்சுகிட்ருந்தவங்களோடயே சம்பந்தம் வச்சுக்க நினைக்குறது காமெடியான மேட்டர் மட்டுமில்லை, உலகம் தழுவிய அன்பை வெளிப்படுத்துற சமுதாய சிந்தனையும்கூட..!
Rate this:
மங்கூஸ் மண்டையன் - பழனி அடிவாரம் ,இந்தியா
26 ஜன, 2013 - 04:58 Report Abuse
 மங்கூஸ் மண்டையன் இந்த விமல் காரனுக்கு நூறு ரூவா எல்லாம் அதிகம். வேணா ஒரு பதினேழு ரூவா கொடுக்கலாம்.
Rate this:
raman - iit,இந்தியா
25 ஜன, 2013 - 19:12 Report Abuse
 raman நல்லா வர வாழ்த்துகள்.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
25 ஜன, 2013 - 19:00 Report Abuse
 பயில்வான் உங்க படத்துக்கு நூறு ரூவா ரொம்ப அதிகம் எழில் சார் ,
Rate this:
இவங் mainda - rawang,மலேஷியா
25 ஜன, 2013 - 17:17 Report Abuse
 இவங் mainda super
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in