Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டில் தலைவருக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர்: தெலுங்கு இயக்குனர் பேட்டி!

24 ஜன, 2013 - 14:44 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் பிரபலமான இயக்குனர் சேகர் காமுவாலா. "டாலர் ட்ரீம்ஸ்" என்ற படத்தை தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் இயக்கி பரபரப்புடன் சினிமாவில் நுழைந்தவர். இவர் இயக்கிய "ஆனந்த்", "ஹேப்பி டேஸ்", "லைப் இஸ் பியூட்டி புல்", என அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது விருதுகளையும் பெற்றது. 2010ம் ஆண்டு சேகர் காமுவாலா இயக்கிய படம் "லீடர்". இந்தப் படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்தது. ராணா கதாநாயகனாக நடித்திருந்தார், ரிச்சா கங்கோபாத்யாயா கதாநாயகி. சுஹாசினியும் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் இது.

அதாவது ஆந்திராவில் முதல்வராக இருக்கும் ராணாவின் தந்தையை அவரது அரசியல் எதிரிகள் கொன்று விடுகிறார்கள். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் ராணா இந்தியா திரும்புகிறார். அவர் தன் தாய் சுஹாசினியின் வழிகாட்டுதலோடு அரசியலில் நுழைந்து தலைவராகி தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவார். நாட்டுக்கு நல்லது செய்யும் முதல்வராக பதவியில் அமர்வது மாதிரியான கதை.

இப்போது இந்தப் படத்தை சேகர் காமுவாலா தமிழில் ரீமேக் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியிருப்பதாவது: லீடர் தெலுங்கில் வெளியான உடனேயே அதனை தமிழில் ரீமேக் செய்யும் எண்ணம் இருந்தது. இதற்காக ரஜினியை சந்திக்க முயற்சித்தேன். அது முடியவில்லை. அதனால் அந்த திட்டத்தை கைவிட்டேன். இப்போது மட்டுமல்ல எப்போது லீடர் படத்தை தமிழில் ரீமேக் செய்தாலும் அதில் நடிக்க தகுதியுள்ள ஒரே நட்சத்திரம் ரஜினிதான். அவரைவிட அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் யாரும் இல்லை. இன்றைக்குள்ள சூழ்நிலையில் தலைவர் பதவிக்கு தகுதியானவர் அவர்தான். ஒரு அரசாங்கத்தை மாற்றும் சக்தி அவருக்கு இருக்கிறது. இளைஞர்களிடையே அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் தகுதி அவருக்கு இருக்கிறது. லீடரை தமிழில் ரீமேக் செய்ய இது சரியான தருணம். இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்தான்.
இவ்வாறு சேகர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Jax - herning,டென்மார்க்
03 பிப், 2013 - 02:18 Report Abuse
 Jax எனக்கு என்னமோ பவர் ஸ்டார் தான் சரியாய் இருப்பார்னு தோணுது.
Rate this:
JAIRAJ - CHENNAI ,இந்தியா
27 ஜன, 2013 - 08:48 Report Abuse
 JAIRAJ கால்ஷீட்டுக்கு காக்கா பிடிச்சுட்டு அப்புறம் ஊத்திகிச்சு துட்டுகுடுனு அலற்ரத்துக்கா. why are you behind old. Try with new young actor. There are plenty available in the World. Earn more against nominal investment. Don't wide open your mouth and expand your legs. Be in limit. Don't be a shuttle cock ! (cork)
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 ஜன, 2013 - 14:02 Report Abuse
 LAX தலைவர் பொறுப்பு வகிக்க தகுதியுள்ள ஒருவருக்கு இவ்வளவு தயக்கம் கூடவே கூடாது. அவருக்கே தெரிகிறது அவர் அதற்கு தகுதியானவர்தானா என்று பல வருடங்களாக யோசித்துக்கொண்டே............... இருக்கிறார். பிறகென்ன? இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிறுவீங்களே
Rate this:
buhari - dubai  ( Posted via: Dinamalar Android App )
25 ஜன, 2013 - 13:23 Report Abuse
buhari ஏண்டா நம்ம தமிழ்நாட்டுக்கு தி்ரை கூத்தாடிகள் தான் அரசியலுக்கு வரனுமா இதுவரைக்கும் பட்டது போதாதா
Rate this:
asif - krishnakiri  ( Posted via: Dinamalar Android App )
25 ஜன, 2013 - 07:34 Report Abuse
asif விஐய் ட்ரை பண்ணுங்க சார் படம் மெகா hit....vijay only next supper star.....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in