ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
காலத்தால் அழியாத இளையராஜாவின் பழைய பாடல்களை, முதன்முறையாக "டி.டி.எஸ்., ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளனர். அவற்றிக்கு, இசைப்பிரியர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராம போனிலிருந்து, "கேசட் முறைக்கு மாறிய பின், "ஸ்டீரியோ தொழில்நுட்பம் பிரபலமானது. அதன்பின், "டிஜிட்டல் தொழில்நுட்பம் தலைகாட்டி, "சிடிக்கள் வரத்தொடங்கின. 5.1 ஒலியை கடந்து, தற்போது 7.1 ஒலிஅமைப்பு நடைமுறையில் உள்ளது. "டேப் ரிக்கார்டர் உபயோகித்த வீடுகளில், "ஹோம் தியேட்டர் இடம் பிடித்ததால், பழைய பாடல்களை சுவாரஸ்யமாய் கேட்க முடிவதில்லை. "ரீமிக்ஸ் முறையில், பாடலின் உண்மை தன்மை, பாதிக்கப்படுகிறது. அந்த குறையை போக்கும் விதமாக, இளையராஜாவின் பழைய பாடல்களை, அதே இசையில், "டி.டி.எஸ்., முறையில் ஒலி மாற்றம் செய்து, முதன் முறையாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். வெளியாகி உள்ள நான்கு ஆடியோ "சிடிகளும், "5 டிராக் மற்றும் "2 டிராக் என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு "சிடியின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான "சிடிகள் விற்பனையாகியுள்ளன.