கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி |
தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார்.
ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் "திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை..." என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.
முதலில் பாடுவதற்கு மட்டுமே ஆஜீத்தை அழைத்தார்களாம். பின்னர் அந்த பாட்டுக்கு ஒரு சின்னப்பையன் கேரக்டர் தேவைப்பட்டதால் ஆஜீத்தையே நடிக்க வைத்துவிட்டார்கள். ஒரே படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமாகி இருப்பது ஆஜீத் குடும்பத்தாரை ரொம்பவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.