சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |

மணிரத்னத்தின், "கடல் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் துளசி. "அலைகள் ஓய்வதில்லை ராதாவின் மகளான இவர், "கடல் படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே, முறையான நடிப்பை பல மாதங்களாக பயிற்சி எடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி, அம்மா ராதா நடித்த பல காதல் படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்ததோடு, அவரது கெமிஸ்ட்ரியை கண்டு வியந்து போனாராம். கூடவே, "என் அம்மாவின் நடிப்பு,
எனக்கு தூண்டுதலாகவும் அமைந்தது என்று சொல்லும் துளசி, அதன் காரணமாக "அலைகள் ஓய்வதில்லை படத்தில் அம்மா நடித்ததை விட, "கடல் படத்தில், என்னால்
சிறப்பாக நடிக்க முடிந்தது. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான வாய்ப்பு எனக்கு விரைவிலேயே கிடைக்கும் என்கிறார்.