ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தனது மகள் ஐஸ்வர்யாவை பூபதிபாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் செய்துள்ளார் அர்ஜூன். அவரை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்தபோதே, பாலிவுட்டுல கேட்டாக, டோலிவுட்டுல கேட்டாக நான்தான் தமிழ் எனக்கு வாழ்வு கொடுத்த பீல்டாச்சேன்னு இங்க அறிமுகம் செய்றேன் என்று பில்டப் கொடுத்தார் ஆக்சன் கிங். அதோடு, என் மகளை சும்மா கத்துக்குட்டியாக களமிறக்கல. என்னதான் மீன்குஞ்சியாட்டம் இருந்தாலும் முறையான நடிப்பு பயிற்சி கொடுத்துதான் இறக்குறேன் என்றும் சொன்னார்.
ஆக, இப்போது பட்டத்துயானை படப்பிடிப்பும் தொடங்கியாச்சு. முதல் காட்சியை செண்டிமென்டாக ஸ்ரீரங்கம் கோயிலை ஐஸ்வர்யா சுற்றி வருவது போல் படமாக்கியவர்கள், பின்னர் விஷால், ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகளையும் படமாக்கியுள்ளனர். அப்போது, நடிப்பு என்பதையே மறந்து நிஜ காதலி போலவே ஐஸ்வர்யா நடித்ததாக சொல்லும் விஷால், இதுவரை எத்தனையோ நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாருமே நடித்ததில்லை. அப்படியொரு உருக்கம். எனக்கே அவருடன் நடித்த பிறகு காதல் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று சினிமா வட்டாரங்களில் டமாரமடித்து வருகிறார் விஷால்.