ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
65 வயது ஹாலிவுட் ஹீரோ கம் அரசியல்வாதி அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் நடித்துள்ள புதிய படம் "தி லாஸ்ட் ஸ்டாண்ட்". ஜானி நாக்ஸ், லூயிஸ் கஸ்மேன், ஜேமி அலெக்ஸாண்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். கிம் ஜி வூன் இயக்கி உள்ளார். பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்று, சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கும் அவரை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கிறது, சர்வதேச போதைக் கடத்தல் கும்பல். ஒரு காலத்தில் தங்களை மாட்டிவிட்ட அர்னால்டுக்கு இப்போது வயதாகி விட்டதால் அவரை போட்டுத் தள்ள படையை அனுப்புகிறது. வெகுண்டு எழும் அர்னால்டு சுயசரிதை எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார். அப்புறம் என்ன மிச்சம் மீதி இருக்கும் வில்லன் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டுவதுதான் கதை. வருகிற 18ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அர்னால்டின் ஆக்ஷன் பொங்கல் கொஞ்சம் தாமதமாக வருகிறது.