Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொங்கலுக்கு 5 படங்கள் மட்டுமே ரிலீஸ்...!

10 ஜன, 2013 - 17:38 IST
எழுத்தின் அளவு:

இந்தாண்டு டஜன் கணக்கில் ரிலீஸ் ஆக இருந்த பொங்கல் படங்கள் வழக்கம் போல் தியேட்டர்கள் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டது. இதனால் இந்த பொங்கலுக்கு வெறும் 5 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் சமர், சந்தானத்தின் கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் அடங்கும்.

அலெக்ஸ் பாண்டியன்:
சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பேட் பாய்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் விருந்தாக நாளை(11ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சமர் : விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கிய திரு, மீண்டும் விஷாலுடன் கூட்டணி அமைத்துள்ள படம் சமர். இப்படத்தில் விஷால் உடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இன்னொரு நாயகியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆரம்பத்திலேயே தலைப்பு பிரச்னையில் சிக்கி பின்னர் சமர் என்ற பெயரில் மாறி, கடந்த டிசம்பர் 21ம் தேதியே ரிலீஸ் ஆக இருந்து, பின்னர் பின்வாங்கி இந்த பொங்கலுக்கு வர இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஜன 13ம் தேதி சுமார் 300 தியேட்டர்களில் இப்படம் வெளியாக இருக்கிறது.

கண்ணா லட்டு தி்ண்ண ஆசையா : இதுவரை காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம் முதன்முறையாக ராமநாரயணன் உடன் தயாரிப்பாளராகவும் ப்ளஸ் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ள படம் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா. இப்படத்தில் சந்தானத்துடன் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், சேது என்ற புதுமுகம் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக விஷாகா சிங் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆகும் தருணத்தில் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவரும், படத்தின் முழு கதையே தன்னுடைய படமா இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி என்று பாக்யராஜூம் புகார் கூறியுள்ளனர். இந்தப்படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

புத்தகம் :
ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் புத்தகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடிக்கிறார். சின்னத்திரை புகழ் விஜய் ஆதிராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்துள்ளார். இப்படமும் ப‌ொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

விஜயநகரம் : கல்வி நிறுவனங்களில் நடக்கும் மோசடியை வெளிச்சம் போட்டு காட்ட வரும் படம் விஜயநகரம். இப்படத்தின் ஹீரோவாக சிவனும், ஹீரோயினாக ஹாசினி என்பவரும் நடித்துள்ளனர். தன்வீர் என்பவர் இயக்கியுள்ளார். கார்த்தி, விஷால் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுடன் இந்தப்படமும் பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுமேயானால் இன்னும் சில பங்கள் ரிலீஸ் ஆகலாம். டி.டி.எச். பிரச்னையால் விஸ்வரூபம் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலைப்பாட்டில் கமல் உடன் தியேட்டர் அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் படம் வெளியாக இருக்கிறது.

பெங்கலுக்கு வெளியாகும் இந்த ஐந்து படங்களில் எந்த படங்கள் வெற்றி பெறப்போகிறது என்பதை ரிலீஸ்க்கு பிறகே சொல்ல முடியும். அதுவரை காத்திருப்போம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

அசோக் குமார் - Trichy,இந்தியா
11 ஜன, 2013 - 08:42 Report Abuse
 அசோக் குமார் வயலில் பயிர்கள் ஸ்வாகா!, தொழில் சாலைகளில் கரண்ட் ஸ்வாகா! மக்களிடம் பணம் ஸ்வாகா ! மட்டமான தமிழ் படங்கள் ஸ்வாகா
Rate this:
உம்மா வாப்பா - Atlantic City,ஆன்டிகுவா & பார்புடா
10 ஜன, 2013 - 23:07 Report Abuse
 உம்மா வாப்பா 5 வந்தா என்னா 6 வந்தா என்ன சினிமா கோமாளிகள் திருந்தவா போறானுவ, இங்கு ஒன்னு 10ம் தேதி வெளியிடுறோம் அப்படின்னு கூவிக்கிட்டு கெடக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in