ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக தியேட்டர் அதிபர்களுடன் கமல் சமரசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் "விஸ்வரூபம் படத்தை, முதலில் தியேட்டர்களில் வெளியிடுவதா அல்லது டி.டி.எச்., மூலம் வெளியிடுவதா என்பது தொடர்பாக கமல் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கமல் இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம் படத்தை, வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு வேண்டப்பட்ட தயாரிப்பாளர்கள் மூலம், படம் டி.டி.எச்., வசதியில் வெளியிடும் தேதியை வரும், 11ம் தேதிக்கு பின் மாற்றினால், நாங்கள் தமிழகம் முழுவதும், 400 தியேட்டர்களில் வெளியிடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு கமலிடமிருந்து, உரிய பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், படம் திட்டமிட்டபடி இம்மாதம், 10ம் தேதி டி.டி.எச்., வசதியில், "டிவியில், 11ம் தேதி, 200 தியேட்டர்களில் வெளியிட கமல் ஏற்பாடு செய்தார். சென்னையில் சில தியேட்டர்களில், இப்படத்திற்கு நேற்று காலையிலிருந்து முன்பதிவும் செய்யப்பட்டது. சங்கங்களின் கட்டுப்பாட்டை மதித்து, "விஸ்வரூபம் படத்தை வெளியிடாத தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கட்டுப்பாட்டை மீறிய தியேட்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டதால், நேற்று மாலை, இணையதளத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும், நேற்று இரவு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்திற்கு சென்று பேச்சு நடத்தினர்.
இரவு, 9:15 மணிக்கு வெளியில் வந்த பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை பற்றி கேட்டபோது, "படம் டி.டி.எச்.,சில் வருவதற்கு முன்பாக, தியேட்டர்களில் வரும். எத்தனை தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பது குறித்து, சங்க உறுப்பினர்களை கலந்து பேசி இன்று மாலை, 3:00 மணிக்கு தெரிவிக்கப்படும் என, கூறினார்.
இவர் போன அரை மணி நேரம் கழித்து, வெளியில் வந்த அபிராமி ராமநாதன் கூறும்போது, "பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது என, கூறினார். வேறு பதில் சொல்லவில்லை.
அவருக்கு பின் வந்த கேயாரிடம் கேட்டபோது, "இந்த படம் தியேட்டரில், டி.டி.எச்.,சில் வெளியிடப்படுவது குறித்து, கமல் இன்று அறிவிப்பார் என, கூறினார்.