சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் அளித்த பேட்டி: திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. என் பிரண்ட் விஷால் கேட்டுக் கொண்டதாலும், கதை பிடித்திருந்தாலும் நடிக்கிறேன். என் சுதந்திரத்தில் அப்பா எப்பவுமே தலையிட மாட்டார். அதுமாதிரி இதற்கும் ஒப்புக் கொண்டார். ஒரு பெரிய நடிகரின் மகள் என்பதால் எனக்கு பத்தாயிரம் சதவிகிதம் பொறுப்பு இருக்கிறது. அவர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வேன். ஆக்ஷன் கிங் மகள் ஆக்ஷன் பிரின்சஸ் என்று எல்லோரும் பாராட்டும்படி நடிப்பேன். அப்பா மாதிரி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படத்தில் நடிப்பேன். அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறது. நிறைய ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் எனது பெயரை ஐஸ்வர்யா அர்ஜுன் என்று வைத்துள்ளேன். என்றார்.