Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!

30 டிச, 2012 - 10:21 IST
எழுத்தின் அளவு:

""அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி, என, ரஜினி கூறினார். மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நடந்தது.

ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறோம்

விழாவில் பேசிய கருணாநிதி, 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை என்றார்.

என் வழி தனி வழி

ரஜினி பேசுகையில், ""1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி, என்றார்.

கமல்ஹாசன் பேசும்போது, எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக இருக்கிறேன். நிதியமைச்சருக்கு உயர் பொறுப்புகள் வரும் என்று பலரும் கூறுகிறார்கள், அவருக்கு வர நானும் ஆசைப்படுகிறேன். அதற்கான உரிமை எனக்கு இருக்கிறது, என் ஆசையை நிறைவேற்றுங்கள் என்றார்.

விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

JAIRAJ - CHENNAI,இந்தியா
15 ஜன, 2013 - 18:58 Report Abuse
 JAIRAJ பைத்தியக்கார ரசிஹர்கள் இறுக்கும் வரை உன் காட்டில் மழை தான். ம்..........அப்புறம் ?
Rate this:
சுரேன் - thanjavur,இந்தியா
03 ஜன, 2013 - 09:44 Report Abuse
 சுரேன் he is an actor that is all... he worked well and he got his salary.. he is doing his work.. don't blame ya..
Rate this:
thamilan - Sivakasi,இந்தியா
02 ஜன, 2013 - 23:17 Report Abuse
 thamilan ரஜினிய பத்தி பேச யாருக்குமே தகுதி கிடையாது. நீங்க என்ன நாட்டுக்கு செஞ்சீங்க . அடுத்தவங்கள குறை சொல்லாம அவங்க அவங்க வேலைய போய் பாருங்க
Rate this:
ravi - poochaandi,இந்தியா
31 டிச, 2012 - 15:21 Report Abuse
 ravi நான் வருவேன் அனால் வர மாட்டேன் .....இது ஒருத்தர் ... எனக்கு அரசியல் தெரியாது இது மட்டும்தானா தெரியாது இது இன்னொருத்தர்
Rate this:
lokesh - bangalore,இந்தியா
31 டிச, 2012 - 12:04 Report Abuse
 lokesh Thalaiva contest in MP election 2014,Choose BJP .For sure u can win and easily u can become central minister.Do good for all Indians.u can do it.We all r expecting this from u...
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in