தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்! | பிகினி உடையில் திரியும் நமீதா! | விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு | கத்தி, கம்பு, அரிவாளை இனி எடுக்க மாட்டேன்: சசிகுமார் உறுதி | நட்புக்காக நடிக்கும் வடிவேலு | விரைவில்..."கன்சக்கர் | மாமனார், மாமியார் ஓ.கே.,சந்தோஷத்தில் சமந்தா |
விஸ்வரூபம் படம், ஜன., 10ம் தேதி, டி.டி.எச்., ஒளிபரப்பில் பார்க்கலாம். இதற்கான முன்பதிவு, ஜன., 8ம் தேதி வரை நடக்கும், என, நடிகர் கமலஹாசன் கூறினார். கமலஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள, விஸ்வரூபம் படத்தை, இந்தியாவில் முதல் முறையாக, டி.டி.எச்.,ல் ஒளிபரப்புவதாக அறிவித்தார். இதற்கு, திரையரங்கு உரிமையாளர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "டி.டி.எச்.,ல் ஒளிபரப்பப்பட்டால், திரையரங்குகளில், விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் எனவும், அறிவித்தனர். திரையரங்கு உரிமையாளர்களின், எதிர்ப்பை கண்டுகொள்ளாத கமல், டி.டி.எச்., உரிமையை விற்றுவிட்டார்.
விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து, சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் "டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன. டி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
எங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.