பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
தமிழில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் நீர்ப்பறவைதான் சுனைனாவை ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காட்டியது. அதனால் அந்த படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தில் நாமும் முன்னணி நடிகையாகி விடுவோம் என்று மனசு நிறைய நம்பிக்கை வைத்திருந்தார் அவர். அதனால் படம் திரைக்கு வந்தபிறகு முன்னணி இயக்குனர்கள் வீட்டுக்கதவை தட்டுவார்கள் என்றும் ஆவலுடன் இருந்தார். ஆனால் இதுவரை புதிய படம் விசயமாக ஒருவர்கூட அவர் வீட்டுப்பக்கம் தலைகாட்டவில்லையாம்.
இதனால் பலத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார் சுனைனா. அதோடு இதுவரை திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற வாய்ப்பு கிடைத்து நடிப்பில் முத்திரை பதித்தபோதும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது என்று கூறி வருகிறார். மேலும், இவர்களைப்பொறுத்தவரை நடிகைகள் திறமையை வெளிப்படுத்துவதை விட, உடம்பை வெளிப்படுத்தி நடித்தால்தான் மதிப்பார்கள் போல் தெரிகிறது. அதனால் இனி நானும் ஊரோடு ஒத்துப்போகப்போகிறேன். அதிரடி கிளாமர் படங்களாக செலக்ட் பண்ணி நடித்து பணம் சம்பாதிக்கப்போகிறேன் என்றும் வெறுப்புடன் பேசுகிறார் சுனைனா.