ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"பழனியப்பா கல்லூரி, அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் மது ஷாலினி. தமிழில் தொடர்ந்து சரியான படங்கள் கிடைக்காததால், தாய்மொழியான, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் மது ஷாலினி, மீண்டும் சில கோலிவுட் படங்களை கைப்பற்றியிருக்கிறார். "ஆந்திராவில் இருந்து வரும் நடிகைகளை தமிழ் சினிமா அரவணைத்துக்கொள்ளும் என்பதால், நம்பிக்கையோடு வந்தேன். ஆனால், நான் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், அடுத்தடுத்து படங்கள் கிடைக்காமல், தெலுங்குக்கு சென்று விட்டேன் என்று சொல்லும் மது ஷாலினி, "இந்த முறை நான் தோல்வியோடு திரும்ப மாட்டேன். தமிழில் நான், ஓ.கே., செய்துள்ள இரண்டு கதைகளும் தரமான கதைகள். அதனால், இந்த படங்களுக்கு பின், தமிழில் நானும் நிரந்தர நடிகையாகி விடுவேன் என்கிறார்.