சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ |
மான்வேட்டை, வாகன விபத்து வழக்குகளில் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். சல்மான்கானுக்கு 46 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல பெண்களுடன் அவர் இணைத்து பேசப்பட்ட அவர், நடிகை கத்ரீனா கைப்பை காதலித்து பிரிந்தார். பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கிய சல்மான்கான், 1999ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியின்போது மான் வேட்டையாடியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை ஜோத்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதேபோல மும்பையில் 2002ம் ஆண்டு அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி ஒருவர் இறந்தார். இது குறித்த வழக்கு விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கோர்ட்டுகளில் என் மீது வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன். ஒருவேளை தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், நான் சிறை செல்ல வேண்டியது இருக்கும். சிறை சென்றால் வெளிவந்த பிறகே திருமணம் செய்வேன். இரு வழக்குகளில் இருந்தும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனாலும் தீர்ப்பு வெளிவரும் முன்பே நான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், தீர்ப்பு எனக்கு பாதகமாக அமைந்தால் எனது மனைவி குழந்தையுடன் வந்து என்னை சிறையில் சந்திக்க வேண்டியது இருக்கும். இது நன்றாக இருக்குமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.