விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி |
விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் கதை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் கதை உறவுகளின் அவசியத்தை பேசும் கதையாக அதே சமயம் விஜய்யின் வழக்கமான படமாகவும் இருக்கும் என்று வம்சி கூறியுள்ளார். இதன் மூலம் படத்தில் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.