ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
"பரதேசி படத்தில் நடித்துள்ள அதர்வாவின் நடிப்பு, படத்தின் ரிலீசுக்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும் என்று, அப்பட டைரக்டர் பாலா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். இந்நிலையில், அப்படத்தின் ஒளிப்பதிவாளரான செழியனும், "அதர்வாவின் நடிப்பை வெகுவாக பாராட்டுகிறார். கதைக்காக தன்னை முழுசாக, அதர்வா, அர்ப்பணித்து நடித்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன். அப்படியொரு அசாத்தியமான நடிப்பு வெளிப்பட்டது. அதர்வாவின், "பரதேசி நடிப்பு குறித்து, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 100 படத்தில் நடிக்க வேண்டிய நடிப்பை, ஒரே படத்தில் கொட்டி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும் என்று சொல்லும் செழியன், "என் கண்களுக்கு அதர்வா, ஒரு இளம் வயது நடிப்பு மேதையாக தெரிகிறார் என்கிறார். பாராட்டு மழையில் நனைந்து, நனைந்து, அதர்வாவுக்கு, ஜலதோஷமே பிடித்து விடும் போலிருக்கிறது.