Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியிடுங்கள் - ரசிகர்கள் கோரிக்கை

09 நவ, 2021 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Fans-request-to-release-Valimai-movie-in-other-languages

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வினோத் இயக்கத்தில் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார் அஜித். இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான அண்ணாத்த, டாக்டர் போன்ற படங்கள் பெரிய அளவில் வசூலித்து இருப்பதால் வலிமை படத்தையும் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களை பல மொழிகளில் வெளியிடுவது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் வலிமை படத்தை ஹிந்தியில் வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கூடவே, வலிமை படத்தின் ஹிந்தி டிரைலரையும் வெளியிடுங்கள் என்று பதிவிட்டு, டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் வலிமை படம் தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகலாம் என தெரிகிறது.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ள நிலையில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாநடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் வெளியானது விஜய்சேதுபதி மகள் நடித்த படம்ஓடிடியில் வெளியானது விஜய்சேதுபதி ... கமல் படத்தை இயக்குகிறாரா பா.ரஞ்சித்? கமல் படத்தை இயக்குகிறாரா பா.ரஞ்சித்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14 நவ, 2021 - 12:54 Report Abuse
ramesh tamilaye oruthanum பார்க்கமாட்டேன் இதுல ஹிந்தி தெலுகு வேற கேக்குதா
Rate this:
mohan - chennai,இந்தியா
10 நவ, 2021 - 15:53 Report Abuse
mohan அஜிட்ஜ்ஹுக்கு தமிழில் மட்டும் மவுசு தெலுகு இந்தியில் அஜித் மவுஸு சுத்தமாக கிடையாது ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in