சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் 2016ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛ரஜினி முருகன்'. கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்தார். இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தீர்மானித்துள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ' படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க பேசி வருவது குறிப்பிடத்தக்கது.