Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

100 மில்லியனைக் கடந்த 'சாரங்கதரியா'

01 ஏப், 2021 - 12:53 IST
எழுத்தின் அளவு:
saranga-dariya-gets-100-million-views

யு டியூப் சாதனையில் மற்ற எந்த ஹீரோயின்களும் செய்யாத ஒரு சாதனையை நடிகை சாய் பல்லவி செய்திருக்கிறார். பொதுவாக யூ டியூப் தளத்தில் டாப் ஹீரோக்களின் பாடல்களுக்குத்தான் மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைக்கும்.

ஆனால், சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் 100 மில்லியனைக் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. அதில் தமிழ்ப் பாடலான 'ரௌடி பேபி' பாடல் 1100 மில்லியனைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. தெலுங்குப் பாடலான 295 மில்லியனைக் கடந்துள்ளது.


தற்போது 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்கதரியா' பாடல் 100 மில்லியனைக் கடந்துள்ளது. ஒரு லிரிக் வீடியோ பாடலே இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றுள்ளதென்றால் முழு வீடியோவும் வெளிவந்தால் அதுவும் மேலும் பல சாதனைகளைப் படைக்கலாம்.


இந்த ஒரு பாடலுக்கான வரவேற்பை 'லவ் ஸ்டோரி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாம். ஏப்ரல் 16ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மேஸ்ட்ரோ : அந்தாதுன் தெலுங்கு ரீமேக் டைட்டில் அறிவிப்புமேஸ்ட்ரோ : அந்தாதுன் தெலுங்கு ரீமேக் ... சுல்தானுக்கு வருத்தத்துடன் வாழ்த்து சொன்ன நாகார்ஜுனா சுல்தானுக்கு வருத்தத்துடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)