Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - பிரியாத வரம் வேண்டும்

06 ஜன, 2021 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Piriyadha-varam-vendum

படம் : பிரியாத வரம் வேண்டும்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : பிரசாந்த், ஷாலினி, கோவை சரளா, மணிவண்ணன்
இயக்கம் : கமல்
தயாரிப்பு : நிகிலா எண்டர்பிரைசஸ்

நட்பு, காதலாக மலரும் தருணத்தை, அழகாக வெளிக்காட்டிய படம், பிரியாத வரம் வேண்டும். கடந்த, 1999ல், மலையாளத்தில் வெற்றி பெற்ற, நிறம் என்ற படத்தின், ரீமேக் இது. நிறம் படத்தை இயக்கிய கமலே, தமிழிலும் இயக்கினார். இரு படத்திலும் கதாநாயகியாக, ஷாலினி நடித்தார்.

இப்படம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். படம் வெளியாவதற்குள், படக்குழுவிற்கு, நாக்கு தள்ளிவிட்டது எனக் கூறலாம். இரண்டாவது நாயகியாக நடிக்க, சினேகா தேர்வு செய்யப்பட்டார். பின், நிறம் படத்தில் நடித்த ஜோமோல், அக்கதாபாத்திரத்தில் நடித்தார். தயாரிப்பாளரின் பணப்பிரச்னை காரணமாக, இப்படம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பிரசாந்த் வேறு படங்களில் நடிக்க சென்றார்.

ஷாலினியின், கால்ஷீட் வீணடிக்கப்பட்டது. ஒருவழியாக படப்பிடிப்பு திக்கி திணறி நடக்கையில், அஜித் - ஷாலினி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என, முடிவெடுத்திருந்தார். அதனால், கிளைமேக்ஸ் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நிறம் படத்திலிருந்த காட்சிகளை எடுத்து வெட்டி, ஒட்டி படத்தை முடித்தனர்.

தேதி பிரச்னை காரணமாக, ராகவா லாரன்ஸ் நடனத்தில், வாஸ்கோடகாமா... என்ற பாடல், படம் பிடிக்கப்பட்டது. இதனால் பிரசாந்த் கோபமடைந்தார். பின், தன் சொந்த செலவில், அந்த பாடலின் படப்பிடிப்பை மேற்கொண்டார். இப்படி பல பிரச்னைகளை சந்தித்தாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை இப்படம் பெற்றது.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், பிரிவொன்றை சந்தித்தேன், அழகு பொண்ணு, டிக்கி டிக்கி லோனா, விடை கொடு விடை கொடு உயிரே... பாடல்கள் ரசிக்க செய்தன.

குடும்பத்தோடு ரசிக்கத்தக்க, நல்ல காதல் கதை, பிரியாத வரம் வேண்டும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ப்ரியமானவளேமறக்க முடியுமா? - ப்ரியமானவளே மறக்க முடியுமா? - 12பி மறக்க முடியுமா? - 12பி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

EMS - chennai,இந்தியா
06 ஜன, 2021 - 13:39 Report Abuse
EMS இந்த படம் அந்த அளவு ஓடிய படம் இல்லயெய்.
Rate this:
Vickey.S - கடலூர்,இந்தியா
06 ஜன, 2021 - 11:30 Report Abuse
Vickey.S இது அருமையான குடும்பப் படம். 2000 ஆண்டுகளில் வெளியான சினிமா பற்றி விளக்கங்கள் அ்ருமை. அது போல்1980 களில் உள்ள படங்களான ரோசாப்பூ ரவிக்கைக்காரி, பதினாறு வயதினிலே, ஆனந்தராகம், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களையும் அதன் சாதனைகளையும் குறிப்பிட்டு எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in