ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
"ஜாப் தக் ஹை ஜான் படம், திரைக்கு வந்த மகிழ்ச்சியில் இருக்கும், ஷாரூக்கான், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கியுள்ளார். சமீபத்தில், டில்லியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ஷாரூக்கானிடம், "அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா என, ரசிகர்கள் கேட்க, வெட வெடத்து போய் விட்டார், அவர். பின், சுதாரித்துக் கொண்டு,"படத்தில் நடிப்பதும், மக்களுக்கு தேவையான பொழுது போக்கு அம்சங்களை வழங்குவதும் தான், என்னுடைய வேலை. அரசியல் ஆசை, அறவே இல்லை. அரசியலுக்கும், நமக்கும், சரியாக வராது என்றார். குறும்புக்கார ரசிகர்கள், அப்படியும், ஷாரூக்கை விடவில்லை. "அரசியல் ஆசை இல்லை என்பது சரி; அரசியல்வாதி கேரக்டரில் நடித்தால், யாரைப் போல் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என, அடுத்த கேள்வியை எழுப்பினர். ஷாரூக்கானோ, " இது சரியான கேள்வி. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை போன்ற, அரசியல்வாதி வேடத்தில் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். அவரின் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.