ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அக்ஷய் குமார்-சோனாக்ஷியின் கூட்டணியில் விரைவில் வெளியாகவுள்ள "ஜோக்கர்" படம், பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும், ஏற்கனவே "ஹிட்டாகி விட்டன. அதிலும், சித்ராங்கதா சிங் என்ற நடிகையின் குத்தாட்ட பாடல், மிகவும் பிரபலமாகி விட்டது. இந்த பாடல் காட்சியில், சித்ராங்கதா அணிந்துள்ள உடை, 1990ல் வெளியான "சல்லாப் என்ற படத்தில், பாலிவுட்டின் மாஜி அழகுச் சிலை, மாதுரி தீட்ஷித் அணிந்திருந்த உடையைப் போல் உள்ளதாகவும், பாடல் காட்சியும், மாதுரி ஆடிய பாடலின் "ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பதாகவும், முணு முணுப்பு எழுந்துள்ளது. இதைக்கேள்விப்பட்ட சித்ராங்கதா, "ஏதாவது, வதந்தி பரப்புவதே, மீடியாக்களுக்கு வேலையாகப் போய் விட்டது. மாதுரி அணிந்திருந்த உடைக்கும், ஜோக்கர் படத்தில், நான் அணிந்துள்ள உடைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. ஏன், எங்களுக்கெல்லாம், அழகாக உடையணியும் ரசனை இல்லையா, படம் வந்த பின் பார்த்து விட்டு போங்கள்என, குமுறித் தீர்த்து விட்டார்.