ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தூம்-3 படத்திற்காக கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு நடிகர்கள் அமீர்கானும், ஜாக்கி ஷெராப்பும் இணைந்து பணியாற்ற உள்ளனர். தூம், தூம்-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் 3வது பாகமாக தூம்-3 உருவாக உள்ளது. இதில் அமீர்கான் ஹீரோவாகவும், ஹீரோயினாக கத்ரீனா கைப்பும் நடிக்கின்றனர். இவர்களுடன் தூம், தூம்-2 படங்களில் ஏற்கனவே நடித்த அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ஜாக்கி ஷெராப்பும் நடிக்கவுள்ளார். அமீர்கானும், ஜாக்கியும் இதற்கு முன்னர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ரங்கீலா என்ற படத்தில் நடித்து இருந்தனர். இப்போது கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இப்படத்தை இயக்கவுள்ளார். முதற்கட்டமாக தூம்-3 படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.