ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேதார்நாத் வெள்ள பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஹிந்தி படத்திற்கு பா.ஜ.,வை தொடர்ந்து காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயமலையில், மந்தாகினி நதி கரையில் உள்ள கேதார்நாத் கோவில் புகழ் பெற்றது. இந்த பகுதியில் 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்து, கேதார்நாத் என்ற ஹிந்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.
தோனி புகாழ் சுசாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாகவும், சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிஷேக் கபூர் இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்னர் வெளியானது.
லவ் ஜிகாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல படம் உள்ளது. மிகப்பெரிய இயற்கை சீற்றத்தின் பின்னணியில், ஒரு காதல் படம் எடுத்து வருகின்றனர். கேதார்நாத் கோவில் இந்துக்களுக்கு புனிதமானது. இந்துக்களை பட குழுவினர் அவமதித்து விட்டனர் என பா.ஜ.வை சேர்ந்த அஜேந்திர அஜய் என்பவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸை சேர்ந்த காரிமா தசானி என்பவரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சார்தாம் என அழைக்கப்படும் நான்கு முக்கிய கோவில்களில், கேதார்நாத் கோவிலும் ஒன்று. கோடிக்கணக்கான இந்துக்கள் அந்த கோவில் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அப்படத்தில் முத்த காட்சி வருகிறது. இந்துக்களின் நம்பிக்கைகளுடன் பட குழுவினர் விளையாடி வருகின்றனர். இப்பிரச்னை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன் என கூறியுள்ளார்.
இதனால் இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.