14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. புற்றுநோய் பாதிப்புக்கு தான் ஆளாகியிருப்பதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு அனைவரையும் கவலையில் ஆழ்த்தினார்.
அதையடுத்து, நியூயார்க்கிற்கு சிகிச்சைக்காக செல்வதாக தெரிவித்தார் சோனாலி. இந்நிலையில், தற்போது சோனாலியின் கணவரான கோல்டி பெஹ்ல் என்பவர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், சோனாலி சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.