சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல பாலிவுட் நடிகை பிபாசாபாசு. தமிழில் விஜய்யுடன் சச்சின் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் கரன் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிபாசாபாசு, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
ஆனாலும் யோகாசனம், உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்திருந்தார். என்றாலும் 39 வயதாகும் பிபாசபாசுக்கு சிறு வயது முதலே ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்தது. அது இப்போது மூச்சு திணறல் பிரச்சினையாக உருவெடுதள்ளது. இதற்காக கடந்த பல மாதங்களாக அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் உடடினாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். பிபாசா பாசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியை வேடிக்கையான படமாக இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டுள்ளார் அவரது சகோதரி.