ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்ரீதேவியின் மறைவு, அவரது மகள்களான, ஜான்வியையும், குஷியையும் கடுமையாக பாதித்துள்ளது. ஸ்ரீதேவி மறைந்து, மாதங்கள் உருண்டோடினாலும், அந்த இழப்பிலிருந்து, மகள்கள் இருவரும், இன்னும் மீளவில்லை என்பது, சமீபத்திய நிகழ்வுகளில் தெரியவந்துள்ளது.
போனி கபூரின் சகோதரர், அனில் கபூரின் மகளும், நடிகையுமான, சோனம் கபூர் திருமணம், சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில், ஜான்வியும், குஷியும், தங்கள் தந்தையுடன் சென்று, பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில், நடனமாடும்படி, ஜான்வியை, சிலர் வற்புறுத்தினர். ஆனால், சிரித்தபடியே, அதை மறுத்து விட்டார், அவர்.