Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மறைந்த நடிகர் வினோத் கன்னாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது

13 ஏப், 2018 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Vinod-khanna-honoured-with-Dadasaheb-Phalke-Award

மறைந்த பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவிற்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் வினோத் கண்ணா, 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த "மான் கா மீட்" என்ற படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து "மேரி அப்னே, மேரே கான், மேரே தேஷ், கேத்தார், ஜெயில் யாத்ரா, அமர் அக்பர் ஆன்டனி, ராஜ்புட் குர்பானி, ஜூரம்" உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

அஜானுபாகுவான உடல் தோற்றமும், அவரது அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஷாரூக்கானின் தில்வாலே படத்தில் நடித்திருந்தார்.

நடிகராக மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாகவும் இருந்த வினோத் கண்ணா, புற்றுநோயால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார்.

சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி, மத்திய அரசு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.

Advertisement
உயிருக்கு போராடுகிறாரா இர்பான் கான்?உயிருக்கு போராடுகிறாரா இர்பான் கான்? தமிழில் ஹீரோவாக நடிக்கவே ஆசை : வருண் தவான் தமிழில் ஹீரோவாக நடிக்கவே ஆசை : வருண் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in