ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் வடஇந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 63-வது வட இந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. இதில் 2017ம் ஆண்டு வெளிவந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த படத்துக்கான விருது ஹிந்தி மீடியம் படத்திற்கு வழங்கப்பட்டது. பரேலி கி பர்பி படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிந்தி மீடியம் படத்தில் நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தும்ஹாரி சுலு படத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்துக்கான ஜூரி விருது நியூட்டன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஜூரி விருது டிராப்பட் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், நடிகைக்கான விருது சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த ஜரியா வாசிமுக்கும் வழங்கப்பட்டது.