அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஆலியா அப்பாஸ் ஜாபர் இயக்கும் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கிறாராம். பாரத் என பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஓடி டு மை பாதர் என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் படமாகும்.
இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைப்பை நடிக்க வைக்க ஆலியா அப்பாஸ் முடிவு செய்துள்ளாராம். பாரத் படத்தில் நடிக்கும் ஹீரோயின் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் கத்ரினா கைப்பை மனதில் வைத்தே, ஹீரோயின் கதாபாத்திரத்தை டைரக்டர் இயக்கி உள்ளாராம். கத்ரினாவுடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருப்பதாலும், அவர் டைரக்டரின் நல்ல தோழி என்பதாலும் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.
ஆலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் இப்படத்தை, அடுல் அக்னிகோத்ரி மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்க உள்ளனராம்.