ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் ஜோகர் - ஷாரூக்கான் கூட்டணியில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட்டானவை. ஆனால் பல ஆண்டுகளாக இந்த கூட்டணி இணையாமல் உள்ளது. இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாகவும், அதில் கஜோலும் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது.
இதுப்பற்றி இத்திபா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான் பேசியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நானும், கரணும் இணைந்து படம் பண்ண பேசி வருகிறோம். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. நாங்கள் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். நிச்சயம் நாங்கள் இணைவோம், அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
1969-ம் ஆண்டு வெளிவந்த இத்திபா படம் இந்தக்காலக்கட்டத்திற்கு ஏற்றபடி உருவா உள்ளது. அபே சோப்ரா இயக்கத்தில், சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷ்ய் கண்ணா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது.