ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பிரெய்ட் அண்ட் பிரிஜுடிஸ், தி மிஸ்டரஸ் ஆப் ஸிபிலிஸ், புரவோகேட் படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களின் படப்பிற்காக அமெரிக்க சென்றிருந்தபோது ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஐஸ்வர்யராயிடம் தவறாக நடக்க முயன்ற தகவல் ஒன்றை அவரது மேலாளர் சிம்ஓன் ஷிப்ல்டு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹாலிவுட் தயாரிப்பாளார் ஹார்வே வெயின்ஸ்டெய்ன் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருந்தார். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கூறியிருந்தார். நானும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். ஐஸ்வர்யாவை யார் சந்தித்தாலும் அவர்களுடன் நான் இருப்பது வழக்கம். அதேபோன்று ஐஸ்வர்யா ராய், ஹார்வே சந்திப்பிலும் நான் உடன் இருந்தேன்.
ஆனால் ஹார்வே என்னை வெளியே போகும்படி சொன்னார். நான் அதை மறுத்து விட்டேன். காரணம் எதற்காக அவர் அப்படிச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்திப்பு முடிந்து திரும்பும்போது என்னை தனியாக அழைத்து கடுமையாக திட்டினார். நான் உன்னை வெளியே போகச் சொன்னபோது ஏன் போகவில்லை. ஐஸ்வர்யாவை நான் தனியாக சந்திப்பதை ஏன் தடுத்தாய். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். அவரது நோக்கம் தெரிந்த நான் நீ நினைப்பது போன்ற ஆள் ஐஸ்வர்யா கிடையாது என்று கடுமையாக திட்டிவிட்டுச் சென்றேன்.
அதன் பிறகும் அவர் தன் செல்வாக்கால் என்னை மிரட்டினார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் கடுமையானவை. என்னை நம்பி வந்த ஐஸ்வர்யாராய்க்கு நல்ல பாதுகாப்பு தர வேண்டியது என் கடமை. அதைத்தான் செய்தேன். ஐஸ்வர்யா ராயின் மூச்சு காற்றைக்கூட தொடுவதற்கு நான் ஹார்வேக்கு வாய்ப்புத் தரவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதே தயாரிப்பாளர் மீது இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலிதான ஜூலி, எம்மா தாம்சனும் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.