ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த 2002-ம் ஆண்டு சஞ்சய் குப்தா இயக்கத்தில் வெளியான படம் கான்டே. அமிதாப், சஞ்சய், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் ஹிட்டானது. 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இதுகுறித்து சஞ்சய் குப்தா கூறுகையில், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி கான்டே இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் அதிகப்படியான பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.