ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே மில்கா சிங், மேரி கோம், தோனி, சச்சின், அசாருதீன் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தது. தற்போது சாய்னா உள்ளிட்ட சிலரின் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்தப்படியாக கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை பெற்று தந்த ஆல்-ரவுண்டரான கபில் தேவ்வின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் கபில் தேவ் வேடத்தில் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்கபோவதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது ரன்வீர் சிங் அந்த வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
1983-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. கபீர் கான் இப்படத்தை இயக்க உள்ளார். பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.