Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தைகளின் ஆபாச வீடியோ வெளியிடும் திருட்டு பைரசி கும்பல்: தயாரிப்பளர் சங்கம் அறிக்கை

14 செப், 2017 - 10:48 IST
எழுத்தின் அளவு:
TN-Producer-council-statement-about-Piracy

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை மூலம் தமிழ்கன் என்ற இணையதளத்தின் நிர்வாகி கவுரி சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கை வருமாறு:

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், தமிழ் சினிமாவை முன்னேற்றுவதற்கான வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் பைரசி. தற்போது எங்கள் குழுவுடன் பணியாற்ற தொடங்கியுள்ளோம். மேலும் தமிழ்கன்.காம் என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை கண்காணித்ததில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நண்பர்களின் ஆதரவுடன், தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்து பைரசி அட்மின் பற்றிய தொழில்நுட்ப ஆதரங்களை சேகரித்தோம். ஆதாரங்களை தமிழ்நாடு போலீசாரிடம் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்துள்ளோம்.

பொதுமக்கள் பலர் பைரசி என்பது பணம் அதிகம் புரளும் இண்டஸ்ட்ரிக்கு மட்டும் தான் ஏற்படும் என்றும் இதனால் தங்கள் குடும்பத்துக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் நினைத்து வருகின்றனர். பைரசி வலைத்தளங்களை பற்றிய முழு தகவல்கள் தெரியாதவரை நாங்களும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் பைரசி வலைத்தளங்களை நடத்துபவர்கள், குழந்தைகள் போர்னோகிராபி மற்றும் போர்னோகிராபி புரோமோஷன் ஆகிய தீய செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆபாச படங்கள் பார்ப்பதே பாலியல் வல்லுணர்வு அதிகரிக்க முக்கிய காரணம். இவை பாலுணர்வை தூண்டி மனிதனை மிருகமாக்கி அவனை தீய செயல்களில் ஈடுபட வைக்கிறது. இத்தகைய இழிந்த மனப்பான்மை கொண்ட தனிநபர்களை கண்டுபிடித்ததில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் குழுவினர் தார்மீக திருப்தி அடைகிறோம்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதோடு, நமது மாநிலத்தை ஒரு அமைதியான முறையில் வாழவும், வியாபாரம் செய்யவும் சிறந்த இடமாக்க தொடர்ந்து உழைப்போம். மேலும் லண்டனை சேர்ந்த டிக்சன் ஆறுமுகசாமி இவருடைய சர்வதேச கூட்டாளி என்று கவுரி சங்கர் ஒப்புகொண்டுள்ளார். திறம்பட செயல்பட்டு வரும் தமிழக போலீசார் சர்வேதச கூட்டாளியையும் விரைவில் கைது செய்து நம்மை பெருமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கடைசி நேர சிக்கலில் மீண்ட 'துப்பறிவாளன்'கடைசி நேர சிக்கலில் மீண்ட ... தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் இணையதளங்களுக்கு திரைத்துறையினர் உதவி: எஸ்.ஆர்.பிரபு திடுக்கிடும் தகவல் தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in