ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது சூப்பர் நேச்சர் சயின்ஸ் பிக்சன் படம். இதனை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் தமிழ்நாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்பைடர் படத்துக்கு இன்னும் ஒரு டப்பிங் பட இமேஜ் இருப்பதால் அதை மாற்ற லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அதன் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. பாடல் வெளியீடாக மட்டும் இல்லாமல் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 9ம் தேதி கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். 2.ஓ படத்தை தயாரிப்பதும், மருதநாயகம் படத்தை தயாரிக்க இருப்பதும் லைகா நிறுவனம் தான் என்பதால் ரஜினி, கமல் கலந்து கொள்வது உறுதியானது. விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. படத்தின் உரிமத்தை வாங்கியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.