ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தங்கல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அமீர்கான், தயாரிப்பில் உருவாகி வரும் படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தை தங்கல் படத்தில் சின்ன வயது கீதாவா நடித்த ஜய்ரா வாசிம் முதன்மை ரோலில் நடிக்கிறார். அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு மும்பையில் நடந்தது. அப்போது பேசிய அமீர்கானிடம், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படமும், அஜய்தேவ்கனின் கோல்மால் அகைன் படமும் தீபாவளி நாளில் மோத இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமீர்கான், "இதை மோதல் என்று நான் கருத மாட்டேன். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பெரிய படங்களின் ரிலீஸ்க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இரண்டு படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ஆகையால் இங்கு மோதலுக்கு இடமில்லை" என்றார்.