விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பொதுவாக பெரிய ஹீரோக்கள் சில பாடல் ஆசிரியர்கள் தங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்று விரும்புவார்கள். எம்.ஜி.ஆர் கண்ணதாசனையும், ரஜினி வைரமுத்துவையும், கமல் வாலியையும் விரும்புவார்கள். அந்த வரிசையில் இப்போது முன்னணி ஹீரோயின்கள் விரும்பும் பாடலாசிரியையாக வளர்ந்து வருகிறார் உமாதேவி. ஜோதிகா, திரிஷா, நயன்தரா ஆகியோர் தங்களுக்கு தனி பாடல் இருந்தால் அதை உமாதேவி எழுதட்டும் என்கிறார்களாம்.
மெட்ராஸ்' திரைப்படத்தில் உமாதேவி எழுதிய 'நான், நீ, நாம் வாழவே' பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், 'கபாலி' திரைப்படத்தில் உமாதேவி எழுதிய 'மாயநதி' மற்றும் 'வீரத்துரந்தரா' பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் '96', ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் 'அறம்' ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி.
மகளிர் மட்டும் படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, 'அடி வாடி திமிரா' பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. “அறம்” படத்தில் இடம்பெற்றுள்ள, “புது வரலாறே புற நானூறே” மற்றும் “தோரணம் ஆயிரம்” பாடல்களும் வெளியானதில் இருந்து அதன் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிக்கிறார், உமாதேவி.
பரபரப்பாக பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் உமாதேவி, மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் ஹாட்ரிக் ஹிட் அடிக்க இருக்கிறார். மெட்ராஸ், கபாலி, படங்களைத் தொடர்ந்து 'காலா படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் உமாதேவி.