ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகையர் எல்லாம், தமிழ் படங்களில் நடிப்பதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கருதுவர். சில மலையாள படங்களில் தலைகாட்டியதும், அடுத்ததாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து, அதற்கு பின், பாலிவுட்டுக்கும் வலை வீசுவர்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ், தெலுங்கு திரையுலகில், நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்த, ஹன்சிகாவின் நிலை, தலைகீழாக உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காததால், தற்போது, மலையாள படங்களில் நடிக்கும் திட்டத்தில் மும்முரமாக இருக்கிறார்.
தற்போது, தமிழில், பிரபுதேவாவுடன் நடிக்கும் குலேபகாவலி மட்டுமே, அவரது கைவசம் உள்ளது. மலையாளத்தில், வில்லன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து, மார்க்கெட்டை நிலை நிறுத்தியபின், மீண்டும், கோலிவுட்டுக்கு படை எடுக்க திட்டமிட்டுள்ளாராம், ஹன்சிகா.