ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி. ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த படம் இப்போது வருகிற ஆகஸ்ட் 11ந் தேதி வெளிவருகிறது. வசந்த்ரவி என்ற புதுமுகத்துடன் ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சார்பில் சதீஷ்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் தணிக்கைக்கு சென்ற படம் ஏ சான்றிதழ் பெற்று திரும்பியிருக்கிறது. ஆண்ட்ரியா மதுகுடிக்கும் காட்சிக்காக ஏ சான்றிதழ் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ராம் கூறியதாவது:
உங்கள் படத்திற்கு ஏ சான்றிதழா? உங்கள் படத்தில் பெண் மதுகுடிக்கும் காட்சியா? என்று தினமும் நாலு பேராவது போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப் படத்தின் கதை அப்படி, களம் அப்படி. இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள். எப்படி காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள். காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்கிறபோது அவர் மதுகுடிப்பவராக இருக்கும்போது அதை காட்டுவதுதானே முறை.
படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் தராவிட்டால் நானே கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தை பற்றியும் காதலை பற்றியும் 13 வயது நிரம்பாத சிறுவர்களும், சிறுமிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ராம் படம் என்பதால் தங்க மீன்கள் மாதிரி இருக்கும் என்று யாரும் இந்தப் படத்துக்கு குழந்தைகளை கூட்டி வந்து விடக்கூடாது. இது மெச்சூர்டான ஆண்களுக்கும், பெண்களுக்குமான படம். அவர்கள் பார்த்தால் போதும்.
ஏ சான்றிதழ் கொடுத்ததற்கு அவர்கள் சொன்ன காரணத்தைத்தான் கண்டித்தேன். ஆண்கள் குடித்தால் யுஏ பெண்கள் குடித்தால் ஏ என்றார்கள். குடி கெட்ட பழக்கம்தான் அதிலும் ஏன் ஆண் பெண் பேதமை என்பதுதான் என் கேள்வி. 14 கட்கள் கொடுத்து அதை கட் பண்ணினால் யுஏ தருகிறோம் என்றார்கள். பரவாயில்லை ஏ கொடுங்கள் என்று கேட்டு வாங்கியிருக்கிறோம். என்கிறார் ராம்.