ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசு அர்ஜூன் கபூர். இவரது நடிப்பில் அடுத்தப்படியாக வெளியாக இருக்கும் படம் முபாராக்கன். அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் அர்ஜூன் கபூர் அளித்த சிறப்பு பேட்டி...
இரண்டு வேடங்களில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
முபாராக்கன் படத்திற்கு முன்பாகவே அவுரங்கசீப் என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமானது. கரண், சரண் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். இரண்டு வேடங்களில் வெளிவந்த படங்கள் நிறைய பார்த்திருப்போம். அப்படிப்பட்ட படங்களில் இரண்டு ஹீரோக்களும் ஒரே நேரத்தில் தோன்றுவது அபூர்மான ஒன்று. ஆனால் இந்தப்படத்தில் நான் இரண்டு வேடங்களில் படம் முழுக்க வருகிறேன். இந்தப்படத்தின் கதையை கேட்டதும் மிகவும் பிடித்து போய்விட்டதால் உடன் நடிக்க சம்மதம் சொன்னேன். ஒரு வேடத்தில் டர்பன் அணிந்தும், மற்றொரு வேடத்தில் சாதாரணமாகவும் நடித்தேன். இப்படி அடிக்கடி காஸ்டியூமை மாற்றி நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இரண்டு வேடங்களில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அனீஸ் பாஸ்மியுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
நோ என்ட்ரி படம் முதலே அனீஸ் பாஸ்மியை பற்றி எனக்கு நன்கு தெரியும். சுமார் 40 வருடம் அனுபவமிக்கவர். அவர் ஒரு இயக்குநர் என்றாலும், அவருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கிறார். அனீஸ் படத்தில் நடிக்கும் நடிகர்கள் 5 சதவீதம் நடித்தாலே போது அந்தப்படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். ஏனென்றால் கதைக்கு முக்கியத்துவம் தருவார். மேலும் அவர் மிகவும் எளிமையானவர், கோபப்படாதவர். அது தான் அவரின் பலம்.
சித்தப்பா அனில் கபூருடன் நடித்தது பற்றி சொல்லுங்க?
சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது, உணர மட்டுமே முடியும். அதேப்போன்று தான் சித்தப்பா அனில் கபூருடன் பணியாற்றிய அனுபவமும். சின்ன வயது முதலே அவரை பார்க்கிறேன். அவரின் சில படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கு அவர் ஒரு சாதனையாளர். அவருடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.
படம் வெளியாகும் சமயத்தில் ஹீரோ-ஹீரோயின்கள் பற்றி கிசுகிசுக்கள் வருகிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து?
என்னுடைய முதல் படம் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஹாப்கேர்ள்பிரண்ட் படம் வரை எனக்கு அப்படியொரு விஷயம் நடந்தது இல்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டக்காரன். இதுபோன்ற விவகாரத்தில் யாரையும் குறை கூற முடியாது. இன்றைக்கு உள்ள காலக்கட்டத்தில் நடிகையை பற்றி அதிகம் பேசினாலே இதுப்போன்ற கிசுகிசுக்கள் அதிகம் வர தொடங்கிவிடும்.
சமீபகாலமாக நிறைய நடிகர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர், அப்படியானால் ஹிந்தியை தவிர்க்கிறார்களா?
இந்த விஷயத்தில் நான் அப்படி கிடையாது. எந்த ஒரு நடிகரையும் நான் குறிப்பிட்டு பேச முடியாது. இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப நடிகர்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவார்கள் என்று நினைக்கிறேன். நடிகர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஹிந்தி தெரியாது என்றோ அல்லது ஹிந்தியை புறக்கணிக்கிறார்கள் என்றோ அர்த்தம் கிடையாது. ஒருவேளை ஆங்கிலத்தில் பேசுவதால் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்ல விருப்பபட்டிருக்கலாம். நடிகர்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறு கிடையாது, ஒருவேளை அவர்கள் தாய் மொழியை புறக்கணித்தால் நிச்சயம் அது தவறு தான்.
நன்றி! மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என்றார்.