ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அந்தளவுக்கு, இவருடைய படங்களில் முத்தக்காட்சி நிறைந்து இருக்கும். இம்ரான் ஹாஸ்மி, தற்போது அஜய் தேவ்கன் உடன் இணைந்து பாத்சாகோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இலியானா, இஷா குப்தா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான், "என்னுடைய ஆரம்பகால சினிமாவில், படங்களில் நிறைய முத்தக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்படி நான் நடித்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றன. அதற்காக என்னை நான் சீரியல் கிஸ்ஸர் என்று சொல்ல மாட்டேன். படத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவைப்படுகிறது. நான் ஒரு நடிகன், ஆகையால் இப்படியொரு காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது என்றவர். இந்த முத்தத்தால் எனக்கு நிறைய பயன்களும் கிடைத்திருக்கிறது என்கிறார் சிரித்தபடி...!"
பாத்சாகோ படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.