ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் நமஸ்தே லண்டன். அக்ஷ்ய், கத்ரீனா நடித்திருந்த இப்படத்தை விபுல் ஷா இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகம் நமஸ்தே இங்கிலாந்து என்ற பெயரில் உருவாக உள்ளது. விபுல் ஷாவே இயக்க, அக்ஷ்ய் குமார் முதலில் நடிப்பதாக இருந்தது.
சமீபகாலமாக அக்ஷ்ய், கமர்ஷியல் படம் என்பதையும் தாண்டி சமூகம் சார்ந்த சிந்தனை உள்ள கதைக்களத்தில் நடித்து வருகிறார். ஆகையால் நமஸ்தே இங்கிலாந்து படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் விலகினார். இதையடுத்து வேறு ஒரு கமர்ஷியல் ஹீரோவை தேடிய படக்குழுவினர், இப்போது அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அர்ஜூனிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டனர் படக்குழுவினர். தொடர்ந்து ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அனைத்து பணிகளும் முடிந்ததும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.