14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சிம்பு படம் எப்படி குறித்த காலத்தில் தியேட்டருக்கு வராதோ அதுபோலவே கௌதம் மேனன் இயக்கும் படங்களும். ஒரு படத்தை ஆரம்பித்து அதை முடித்து ரிலீஸ் பண்ணினோம் என்பதே அவரது கேரியரில் கிடையாது. ஒரு படத்தை ஆரம்பிப்பார். சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்தை ஆரம்பிப்பார்.
தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை தொடங்கினார். அதை கிடப்பில் போட்டுவிட்டு விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை ஆரம்பித்தார். இதுவும், பல வருடங்களுக்கு முன்பு சூர்யாவை வைத்து கௌதம் மேனன் இயக்கவிருந்த படம். கதை சரியில்லை என்று சூர்யா நிராகரித்த துருவ நட்சத்திரம் படத்தைத்தான் தற்போது விக்ரமை கதாநாயகனாக்கி எடுத்து வருகிறார்.
இந்தப் படத்தில் விக்ரமுக்கு இணையான கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் பார்த்திபனும் நடிக்கிறார். தெலுங்கு பெல்லி சோப்புலு புகழ் ரீது வர்மாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் துருவ நட்சத்திரம் படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக துருவ நட்சத்திரம் படத்தில் ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டு வருகின்றன.