சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பாக முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாம்.
இதனிடையே, இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியானது. ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் 'ஜெய் லவகுசா' படமும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்றார்கள். ஆனால், 'ஸ்பைடர்' தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீடு இதற்கு மேலும் தள்ளிப் போகாது என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள்.
சுமார் 110 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கில் படமாக்கப்பட்டு வரும் 'ஸ்பைடர்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்தை மிகப் பெரும் அளவில் வெளியிட இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.