ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "டியூப்லைட்". சோகைல் கான், ஓம் புரி, சீன நடிகை உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்க இப்படம் நேற்று(ஜூன் 23-ம் தேதி) வெளியானது. உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் டியூப்லைட் படம் ரிலீஸானது. விமர்சகர்கள் மத்தியில் டியூப்லைட் படத்திற்கு வரவேற்பு இல்லை. மனவளர்ச்சி குன்றியவராக சல்மான் கான் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எப்போதுமே தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவரும் சல்மான் கானுக்கு, இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே தெரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆகையால் படத்தின் முதல் நாள் வசூலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சல்மானின் முந்தைய படமான சுல்தான் விட குறைவாக வசூலித்திருக்கிறது டியூப்லைட். முதல்நாளில் டியூப்லைட் படம் ரூ.21.15 கோடி வசூலித்திருக்கிறது. சுல்தான் படம் ரூ.36.54 கோடி வசூலித்திருக்கிறது.