ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2014ல் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த படம் குயின். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் வாங்கியுள்ளனர். இந்த படத்தை நடிகை ரேவதி இயக்க, தமன்னா நாயகியாக நடிப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. பின்னர் அதுபற்றிய தகவல் இல்லை.
அதன்பிறகு குயின் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகயிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அந்த படத்தில் எமிஜாக்சன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது குயின் படம் ரீமேக்கில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... "கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது உடனே சம்மதம் சொன்னேன். என்றாலும் அந்த படத்தில் நடிப்பது குறித்து இன்னும் ஒப்பந்தமாகவில்லை. பேச்சுவர்த்தையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ள காஜல் அகர்வால், குயின் ரீமேக்கில் நடிக்க பல முன்னணி நடிகைகள் ஆர்வமாக இருக்கும்போது அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்திருப்பது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அந்தவகையில், தென்னிந்திய மொழிகளில் எந்த மொழியில் என்னை நடிக்க அழைத்தாலும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.