ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர், அனுபம் கெர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சினிமா படங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வரிச்சலுகை என்ற ஒன்று அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூக பிரச்னைகளை சொல்லும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படும். அந்தவகையில் திறந்தவெளி டாய்லெட்டை ஒழிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இந்த டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்திற்கு வரிச்சலுகை நிச்சயம் கிடைக்கும். அதுவும் இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை வெளிப்படுத்தும் படம் என்பதால் மற்ற மாநிலங்களில் இல்லாவிட்டாலும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நிச்சயம் இப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.