சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர், தன் மாஜி காதலி கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்துள்ள படம் ஜகா ஜசூஸ். அனுராக் பாசு இயக்கியுள்ள இப்படத்தை சித்தார்த் ராய் கபூர் மற்றும் அனுராக் உடன் இணைந்து ரன்பீரும் தயாரித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் வேளையில், புரொமோஷன் வேலைகளிலும் ரன்பீர் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ரன்பீர், ஜகா ஜசூஸ் தான், தான் தயாரிக்கும் கடைசிப்படம் என்றார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... "ஜகா ஜசூஸ் படத்தை தயாரித்த பிறகு ஒன்றை நான் புரிந்து கொண்டேன். படம் தயாரிப்பது ஒன்றும் ஒரு கப்பில் டீ போடுவது போன்று கிடையாது. இது தான், நான் தயாரிக்கும் கடைசி படமாக இருக்கும். ஒரு நடிகனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் ஒரு தயாரிப்பாளராக நான் சரிப்படமாட்டேன்" என்கிறார்.
ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.